Sunday, October 22, 2017

Viruttham on Mahaperiyavaa (Raagamaalika)

காஷாயத்துள் கைலாய மலையான்
கருணை பொழியும் (இரு) கண் மலரான்.
சூலம் விடுத்து தண்டம் ஏந்துவான். 
கபாலம் மறைத்து கமண்டலம் தாங்குவான்.
ஆட்டம் விடுத்து அமைதியாய் அமர்வான்.
திருநீறணிந்து அருள் நீரளிப்பான்.
திருவாய் மலர்ந்து திருவருள் புரிவான்.
ஞானமதி சேகரன்,
அஞ்ஞான இருள் அகற்றும் சூரியன்.
காமகோடி சங்கரன்
காமாக்ஷி ஏகாம்பரன்,
காருண்ய நாரணன்,
பரப்ரஹ்ம ஸ்வரூபன்,
பரமாச்சார்யன்,
பதம் பணிந்து உய்வாம்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment