Saturday, October 28, 2017

அழகிய சிங்கன் அடி போற்றி.

அழகிய சிங்கன் அடி  போற்றி.

தூணைத் தாயாய் கொண்ட தெய்வம்.
தூயவரைத் தாயாய் காக்கும் தெய்வம்

பக்தனுக்காய் வந்த ஒரே அவதாரம்
பத்தில் இதுவே சிறந்த அவதாரம்.

முகமோ ஜ்வாலா சிம்ஹம்.
மனமோ உருகிய
நவநீதம்

ஸ்வாதியில் உதித்த
தேவன் - நம்மை
ஸ்வாதீனமாய் வாழ வைக்கும் இறைவன்.

ப்ரதோஷக் காலத்தில்
தோன்றினான்
பிறவி தோஷம் எல்லாம் போக்குவான்.

திருவேங்கடனும் தொழும் பெரியவன்
திருமாலில் இவனே
சிறந்த பூரணன்

அரக்கனை மடி வைத்த கருணை
அவன் சந்ததியைக் காத்த அருட் சுனை.

சக்கரத்தில் அமரும் யோகன்
சஞ்சலம் சங்கடம் தீர்க்கும் மார்க்கன்

அன்பருள்ளமே அவன் அஹோபிலம்
மெய் யன்பருக்கதுவே
பெரும் பலம்.

பானக நீரை விரும்பி அருந்துவான்
பரமபதம் தந்து வாழ்த்தி
நெகிழ்வான்.

ஜெய விஜயீபவ நரசிம்மா
பவ பந்தமோசன
லக்ஷ்மீ நரசிம்மா.

சிவம் சுபம்
ந்ருசிம்ஹம் நிர்பயம்.

No comments:

Post a Comment