Tuesday, October 24, 2017

நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை வெண்பாக்கள் (சில)

Sashti Special 10

நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை
வெண்பாக்கள் (சில)

விருத்தம் - ராகமாலிகை

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும் கல்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்!" 

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல்  கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை." 

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன், பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா! செந்தி(ல்) வாழ்வே!" 

அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும்  'முருகா!' என்று ஓதுவார் முன்." 

முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே  ஈசன் மனே ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியேக்  கை தொழுவேன் நான்

சிவம் சுபம்

No comments:

Post a Comment