ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்
எழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுதே உருகி அழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன்..
செந்திலே! வேலவனே!
பாடல் - சங்கராபரணம் - ஸ்ரீ அகஸ்தியர்
செந்தூர் கடற்கரையில் நந்தா விளக்கில் உயர்
சிந்தாமணிக்கு நிகரானவன்
கந்தா குஹா கௌரி மைந்தா எனக் கனிந்து
வந்தார் என் மனக் குறை தீர்ப்பவர்
அன்பிற் பிறந்து வளர் அன்பிற் சிறந்து உயர்
அன்பர்க்கெல்லாம் அன்பு மூர்த்தியாம்
அற்பர்க்கெல்லாம் அசுர துஷ்டர்க் கெல்லாம் அவர்
அச்சப்படும் கால மூர்த்தியாம்
நம்பிப் பணிந்தவர் முன் பிம்பத் தனி மயிலில்
செம்பொற்ச் சிலம்பொலிக்கத் தோன்றுவான்
நம் சிந்தைக் கிசைந்து விளையாடுவான்
பொங்கும் தனிக் கருணைத் தங்கத் தனம்
சகல சம்பைத்தையும் தந்து வாழ்த்துவான்
சிவம் சுபம்
த்யாகராஜன்
No comments:
Post a Comment