ராக : மாலிகா Raaga : Maalikaa
கன்னியாகுமரி அருள் காந்திமதி மீனாக்ஷி
கருணை பர்வத வர்த்தினி
கமலை பராசக்தி சிவகாம சுந்தரி
காழி உமை பிரம வித்தை
தன்னிகரில்லா ஞான அபய வரதாம்பிகை
தையல் அபிராமி மங்கை தந்த அகிலாண்டநாயகி அறம் வளர்த்தவள்
தண்ணருள் செய் காமாக்ஷி இங்கு
என்னை ஆள் கௌரி ஜ்வாலாமுகி உணாமுலை இலங்கு நீலாயதாக்ஷி
எழில் ப்ரமராம்பிகை பார்வதி ஆதி எண்ணிலா நாம ரூப
அன்னையாய் காசி முதலாகிய தலத்து விளையாடிடு
விசாலக்ஷியாம்
அண்டகோடிகள்பணி அகண்ட பூரணி எனும்
அன்னபூரணி அன்னையே
தருமை ஆதினம் பத்தாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகள் அருளிய
காசி அன்னபூரணியம்மை திருவருட்பா
(இந்த ஒரு பாடலின் மூலம் அன்னையின் அனைத்து
முக்கியத் திரு நாமங்களையும் ஜெபித்து இன்புறலாம்)
சிவம் சுபம்
No comments:
Post a Comment