Saturday, October 28, 2017

ஓடிவா ஓடிவா கயற்கண்ணி



ஓடிவா ஓடிவா கயற்கண்ணி, ஆடி ஆடி வா கண்மணி... என் கண்மணி

சந்திரன் போயி  சூரியன் வந்தான், எழுந்து நீயும் நீராடு,
மஞ்சப் பட்டு பாவாடை மல்லிகப் பூவும் வச்சிருக்கேன், அழகாக உன்னை அலங்கரிச்சு மஞ்சக் குங்கும திலகமிட்டு அரசவைக்கு அழச்சுப்  போவேன்.

சிங்காதனத்திலே நீ அமர்ந்து மூ-வுலக ஆண்டிடலாம்,
முக்  கண்ணனை மணந்திடலாம், முருகனை மகனாப் பெத்துக்கலாம், முத்தமிழை வளர்த்திடலாம்.

என்னையும் நல்லா பாத்துக்கலாம். ஏகாந்தமா நாம பேசிக்கலாம்.
மலையத்வஜன் நான்  தானே, காஞ்சன மாலையும் நான் தானே, என் குல மகள் என்றும் நீ தானே,  என் குல தனமும் நீ தானே.

வேகமே வா வா என் தாயே, என் வேதனை களையும் மகா மாயே, பால் சோறு ஊடடிடுவேன், உன் பிள்ளைத் தமிழு பாடிடுவேன், மடியில வச்சு கொஞ்சிடுவேன்.
தாலாட்டி தூங்கப் பண்ணிடுவேன்.

தூங்கும் போது காலை வருடி பதமா பிடிச்சு விட்டுடுவேன்-  த்ருஷ்டியும் நானே கழிச்சிடுவேன் 

ஆராரோ ஆராரோ என் தாயே,  (என்னை)   பாராயோ ஓரக் கண்ணாலே.....

மதுர வாழும் மரகதமே, மதுரம் பொழியும் திரிபுரமே,
கிளியேந்தும் கோமளமே,  என் கலிதீர்க்கும் கோகிலமே!

சிவம் சுபம்

No comments:

Post a Comment