Sunday, October 22, 2017

சுத்த தன்யாசி (folk mix) - Kuzhandaiyananda Swami Paadal


சுத்த தன்யாசி (folk mix)

எங்க ஊரு சாமி
எங்க குழந்தை சாமி
மீனாக்ஷி புத்ர சாமி
அருளாட்சி செய்யும் சாமி

அரசரடி வாழும் சாமி
அரசரும் தொழும் சாமி
அடிபணிவோர்க் கருளும் சாமி
 அரசபோகம் தரும் சாமி

சக்தி உபாசக சாமி
(ஸ்ரீ) சக்கரத்தை வடித்த சாமி
பக்தி ஞானம் வளர்க்கும் சாமி
பாமரர்க்கும்  அருளும் சாமி

கேட்டதெல்லாம் கொடுக்கும் சாமி
கெட்டதை விலக்கும் சாமி
பூச நட்சத்ர சாமி
பூசலை ஒழிக்கும் சாமி 

மாண்டவரை மீட்கும் சாமி
மரணத்தை வென்ற சாமி
சேஷாத்ரி ப்ரிய சாமி
க்ஷேமம் அருளும் குழந்தை சாமி

சிவம் சுபம்

No comments:

Post a Comment