Sunday, May 17, 2015

Siva Bhoga Saaram (19 Select Verses)

1.  ஏதேது செய்தாலும், ஏதேது சொன்னாலும், ஏதேது சிந்தித் திருந்தாலும், மாதேவா நின் செயலே என்று நினதருளாலே உணரின், என் செயலே காண்கிலேனே

2. அவரவருக்கு உள்ளபடி ஈசன் அருளாலே, அவரவரைக் கொண்டு இயற்று மானால், அவரவரை நல்லார் பொல்லார் என்று நாடுவதென்? நெஞ்சமே எல்லாம் சிவன் செயல் என்று எண்.



3. எங்கே நடத்துமோ, எங்கே   கிடத்துமோ, எங்கே இருத்துமோ, என்றறியேன், கங்கை மதி சூடினான், தில்லையிலே தொம் தொம் என நின்று நடம் ஆடினான், எங்கோன் அருள்

4. ஏதேது செய்திடினும், ஏதேது பேசிடினும், ஏதேது சிந்தித்(து) இருந்திடினும்,. மாதேவன் காட்டிடுவ தான் அருட் கண்ணை விட்டு நீங்காது  நாட்டம் அதுவாய்
நட


5. எவ்வுயிரும் காக்கவோர்.ஈசனுண்டோ இல்லையோ, அவ்வுயிரில் நாமொருவர் அல்லவோ - வவ்விப் பொருகுவதும், நெஞ்சே புழுங்குவதும் வேண்டாம், வருகுவதும் தானே வரும்

6. முப்பதும் சென்றால் விடியும், முப்பதும் சென்றால் இருளும், அப்படியே யேதும் அறி நெஞ்சே - எப்போதும் ஆம் காலம் எவ்வினையும் ஆகும், அது தொலைந்து போங்காலம், எவ்வினையும் போம்


7. முன்னை வினைக்கு ஈடா முதல்வன் அருள் நமைக் கொண்டு என்ன வினை செய்ய இயற்றுமோ - இன்ன வினை செய்வோம், தவிர்வோம், திரிவோம், இருப்போம் இங்கு உய்வோம் எனும் வகை ஏது?

8..ஊட்டும் வினை யிருந்தால் உன் ஆணை, உன் பதத்தைப் பூட்டிப் பிடித்துப் புசிப்பிக்கும் - கேட்டுத் திரியாதே, வந்து தில்லைத் தெய்வமே என்றென்று எரியாதே நெஞ்சே இரு



9. என்ன தன்று நின் செயலே என்றறிந்தால், யான் விரும்பி என்னவென்று வாய் திறப்பேன் ஈசனே - இன்னமின்னம் நாயேனை எப்படியோ ஈடேற்ற வேண்டும், உனக் கப்படியே செய்தருளுவாய்

10. இன்ன வினை இன்ன தலத்(து) இன்ன பொழு(து) இன்னபடி இன்னதனால் எய்தும் என அறிந்தே - அன்ன வினை அன்ன தலத்து அன்ன பொழுது அன்னபடி அன்னதனால் பின்னறக் கூட்டும் பிரான்


11. சும்மா தனு வருமோ, சும்மா பிணி வருமோ, சும்மா வருமோ சுக துக்கம், நம்மால் முன் செய்த வினைக்கு ஈடாச் சிவனருள் செய்விப்ப தென்றால், எய்தவனை நாடி இரு

12. கூட்டுவதும் கூட்டிப் பிரிப்பதுவும், ஒன்றொன்றை ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதும், காட்டுவதும் காட்டி மறைப்பதுவும், கண்ணுதலோன் முன்னமைத்த ஏட்டின் படி என்றிரு


13. எத்தனைதான் கற்றாலும், எத்தனைதான் கேட்டாலும், எத்தனை சாதித்தாலும் இன்புறா சித்தமே, மெய்யாகத் தோன்றி விடும் உலக வாழ்வனைத்தும் பொய்யாகத்.தோன்றாத போது

14. கற்க இடர்ப்பட்டு மிகக் கற்ற எல்லாம் கற்றவர் பால் தற்கமிட்டு நாய் போலச் சள்ளெனவோ - நற் கருணைவெள்ளம் அடங்கும் விரிடையார்க்கு ஆளாகி உள்ளம் அடங்க அல்லவோ


15. நீதியில்லா மன்னர் இராச்சியமும், நெற்றியிலே பூதியில்லார் செய்தவமும், பூரணமாம் சோதி கழல் அறியா ஆசானும், கற்பிலரும் சுத்த விழல் எனவே நீத்து விடு

16. ஐந்தறிவாற் கண்டாலும், ஆர் ஏது சொன்னாலும், எநத விருப்பு வெறுப்(பு) ஏய்ந்தாலும், சிந்தையே பார விசாரம் செய்யாதே, ஏதொன்றும்.தீர விசாரித்துச்.செய்

audio link

17. பரபரக்க வேண்டா பலகாலும் சொன்னேன், வர வரக்கண்டு ஆராய் மனமே, ஒருவருக்கும்.தீங்கு நினையாதே, செய்ந் நன்றி குன்றாதே, ஏங்கி இளையா திரு

18. ஆசையறாய், பாசம் விடாய், ஆனசிவ பூசை பண்ணாய், நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய், சீ சீ சினமே தவிராய், திருமுறைகள் ஓதாய், மனமே உனக்கென்ன வாய்


audio link

19. தில்லை வனம், காசி, திருவாரூர், மாயூரம், முல்லைவனம், கூடல்,  முதுகுன்றம், நெல்லைகளர், காஞ்சி கழுக்குன்றம், மறைக்காடு அருணை, காளத்தி, வாஞ்சியமென் முத்தி வரும்

audio link

1 comment: