Monday, October 23, 2017

ஆடிப்புர திருநாள் இதுவே (Cini Tune - Mohanam - Lahiri Lahiri)



ஆடிப்புர திருநாள் இதுவே அன்னை மீனாக்ஷிக்கு வளை காப்பு
ஆலவாய் அரசியின் அருளொன்றே அனைத்துயிருக்கும் பாதுகாப்பு

சொக்கனை பிரியா விடை யவளே சொக்கத் தங்கமாய் ஒளிர்ந்திடுவாள்,
மல்லிகை முல்லை மருக்கொழுந்து மலர் மணமாய்த்  திகழ்ந்திடுவாள்

மரகத மேனி மீனாளே தக தக வெனவே ஜ்வலித்திடுவாள், நீண்ட கூந்தலில் பூச்சூடி
நிறைமதியாய் குளிர்ந்திருப்பாள்

தங்கம் வைர வைடூர்ய கண்ணாடி வளையல்கள் பூட்டிடுவோம்.
மங்கலத் திரு பாதங்களை நலுங்கிட்டே அலங்கரிப்போம் 

கலைமகள் வீணை மீட்டிடவே, அலைகள் கீதம் இசைத்திடுவார்.
மதுரை யாளும் சுந்தரரும் மகிழந்தே கேட்டே ரசித்திருப்பார்.

பலவித பக்ஷண சித்ரான்னம் படைத்தே   
அன்னையைப் பணிந்திடுவோம்.
அய்யனையும் அருகழைத்து தீபாராதனை செய்திடுவோம்

உக்கிரவழுதியாய் குமரனே விரைவில் அவதாரம் செய்திடுவார்.
சோமாஸ்கந்த மூர்த்தியாய் காமாதி ரோஹங்கள் போக்கிடுவார்.

ஜெய ஜெய சங்கரி மீனாக்ஷி - ஹர ஹர சங்கரி மீனாக்ஷி-
ஹர ஹர சங்கரி மீனாக்ஷி- ஜெய ஜெய சங்கரி மீனாக்ஷி

நம்முள் இருப்பது மீனாக்ஷியே
நற்றுணையாவது சுந்தரமே

சிவம் சுபம்.

No comments:

Post a Comment