Sunday, October 22, 2017

கலியுக வரதன் கண் மூன்றுடையான் (Brindavana Saaranga)

கலியுக வரதன் கண் மூன்றுடையான் அவதரித்தானே விழுப்புரத்தில்....

ஈச்சங்குடி அன்னை மணி வயிற்றினிலே இனிதே தோன்றினான் அனுஷத்தில்...

வேதம் தழைத்திட அவதரித்தான், ஆகமம் சிறந்திட வந்துதித்தான்,
தருமமே வடிவான தவசீலன் தன் பாதம் பதித்து புவி அளந்தான், பாமரர் தொடங்கி பண்டிதர் வரையில் அனைவருக்கும் படி அளந்தான்.

ஷண்மத ஸாரத்தை உலகினுக்கே தன் தெய்வக் குரலால் எடுத்துரைத்தான்,  ஸநாதன தர்மக் காவலனாய் அகிலத்தை ஒரு குடை நிழலுள் கொணர்ந்தான்.

காலடியில் அன்று தோன்றியவன் காமகோடியில் நிலை கொண்டான், ஹரிஹர அபேத சந்திரசேகரன், ஸர்வ  ஸம்மத பரமாச்சார்யன்

சிவம் சுபம்

No comments:

Post a Comment