Sunday, October 22, 2017

பச்சைப் பட்டு கட்டிய மரகதமே



பச்சைப் பட்டு கட்டிய மரகதமே, நல் இச்சையெல்லாம் பூர்த்தி செய்யும் சுபகரமே, உன் சுபகரமே

ஆலத்தை  அமுதாக்கும் (உன்) அருட் கரமே
ஆண்டியை அரசாக்கும் (உன்) திருக் கரமே

பச்சைக் கிளி ஏந்தும் தளிர்க் கொடியே
பக்தர் குறை களையும் (உன்)  திருச் செவியே,
அலை கலை தொழுதிடும் மலை
மகளே/மீனாளே
நிலையான தொன்று நின்னருளே

சிவம் சுபம்

No comments:

Post a Comment