Sunday, October 22, 2017

நாயகி நான்முகி நாராயணி (Slokam in Two Raagams)

நாயகி நான்முகி நாராயணி
கை நளின பஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை
சாதி நச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtbEl0X2tHb1I1OXc

https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtamV5cDFVTjRadDg


நாயகி – உலகனைத்துக்கும் தலைவி

நான்முகி – நான்முகனான பிரம்மதேவரின் சக்தி

நாராயணி – நாராயணனின் சக்தி

கை நளின பஞ்ச சாயகி – தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள்

சாம்பவி – சம்புவான சிவபெருமானின் சக்தி

சங்கரி – இன்பம் அருள்பவள்

சாமளை – பச்சை வண்ணமுடையவள்

சாதி நச்சு வாய் அகி – கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை அணிந்தவள்

மாலினி – பலவிதமான மாலைகளை அணிந்தவள்

வாராகி – உலகங்கள் காக்கும் வராக ரூபிணி

சூலினி – திரிசூலம் ஏந்தியவள்

மாதங்கி – மதங்க முனிவரின் திருமகள்

என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே – என்று பலவித புகழ்களை உடையவளின் திருப்பாதங்கள் நமக்கு காவலாகும்.

சிவம் சுபம்


No comments:

Post a Comment