Sunday, October 22, 2017

ஊஞ்சல் ஆடினாள் (ச்ருங்கேரி சாரதை ஊஞ்சலாடினாள்)



ஊஞ்சல் ஆடினாள் அன்னை ஊஞ்சலாடினாள்.
ச்ருங்கேரி சாரதை ஊஞ்சலாடினாள், ச்ருங்கார சாரதை  ஊஞ்சலாடினாள்

நவரத்ன மண்டபத்தில் ஊஞ்சலாடினாள்
நவாவர்ணம் இசைக்க ரசித்து ஊஞ்சலாடினாள்

சங்கரன் மகிழ்ந்திட ஊஞ்சலாடினாள்
சங்கரர்  துதித்திட
ஊஞ்சலாடினாள்
சௌந்தர்ய லஹரி கேட்டு ஊஞ்சலாடினாள்
சௌபாக்ய லக்ஷ்மி அவள் ஊஞ்சலாடினாள்

ஸஹஸ்ர நாமம் ஒலித்திடவே ஊஞ்சலாடினாள்
சமஸ்த லோகம் க்ஷேமமுற ஊஞ்சலாடினாள்
மந்தஹாஸ வதனி யவள் ஊஞ்சலாடினாள்
மங்கலம் பொழிந்து  ஊஞ்சலாடினாள்

சிவம் சுபம்

No comments:

Post a Comment