Sunday, October 22, 2017

Sashti Special 3 & 4 (Thiruvartupa)

தணிகையனின் விஸ்வரூபம் -- வடலூர் வள்ளல் 

சீர் கொண்ட தெய்வ வதனங்கள்  ஆறும்
திகழ் கடப்பந் தார் கொண்ட பன்னிரு தோள்களும்
தாமரைத் தாள்களும்
ஓர் கூர் கொண்ட வேலும் மயிலும்
நற்கோழிக் கொடியும் - அருட்  கார் கொண்ட வண்மைத்  தணிகாசலமும்
என் கண்ணுற்றதே

வள்ளலார் கண்ட திருக்காட்சித் திருவருட்பா 

பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே!
ஞானப் பரஞ்சுடரே !
ஆறுமுகம் படைத்த கோவே !
என்னிரு கண்மணியே! என் தாயே!
என்னை ஈன்றானே! என் அரசே!
என்றன் வாழ்வே!
மின்னிருவர் புடை விளங்க மயில் மீதேறி
விரும்பும் அடியார் காண மேவும் தேவே !
சென்னியில் நின் அடிமலர் வைத்து என்னை முன்னே சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே!

சிவம் சுபம்

No comments:

Post a Comment