உ
(ஹம்ஸானந்நி)
காணக் கண் ஆயிரம் போதுமோ... அன்னை காமாக்ஷியின் நல்லெழில் வடிவைக்....
நாவாயிரம் போதுமோ... நம் அன்னையின் நற்புகழைப் பாட
கரம் ஆயிரம் போதுமோ அவள் அருளைப் அள்ளி அள்ளிப் பருக, மீண்டும் மீண்டும் பிறந்திட வேண்டும், யாண்டும் அவள் முன் அமர்ந்திட வேண்டும், போதும் என்றவள் நெகிழும் வரை, (அவளைப்) பாடிப் பரவி பணிந்திட வேண்டும்
தேவியவள் அபிஷேகம் கண்டேன், என் தோஷமெல்லாம் நீங்கிப் புனிதன் ஆனேன், மஞ்சள் பட்டாடையில் அவள் தவக் கோலம் கண்டேன், (என்) சஞ்சலம் சங்கடம் அறவேக் களைந்தேன்
கணேசன் அன்னையைக் கணமும் விட்டகலான், குமரனும் அருகில் நிழல் கொண்டான், வரதனோ வலத்தில் சந்நிதி கொண்டான், ஏகனோ அவளுள் பாதி ஆனான்.... நாயேன் அன்னையை என்னுள் கொண்டேன்
சிவம் சுபம்
No comments:
Post a Comment