Sunday, October 22, 2017

ஷீரடி பாபா நின் சீரடி (sindhu Bhairavi)



சிந்து பைரவி

ஷீரடி பாபா நின் சீரடி சரணம் திருவருள் புரிவாயே
ஓரடி வைத்தே உன்னை நினைந்தால் ...ஓடோடி வந்தென்னை அணைப்பாயே

குருவாரம் உந்தன் கோயில் வலம்  வருவேன்
குணமது அருள்வாயே - நல்ல குணமது அருள்வாயே
பளிங்கு வண்ண மேனியனே நீ
களங்கமிலா மனம் அருள்வாயே

சத்திய சுந்தர சிவ ரூபா
சாந்தி தருவாயே - மன சாந்தி தருவாயே
அநித்திய வாழ்வில் நித்தியம் நீயே
அடைக்கலம் தருவாயே

நாளும் உந்தன் உதி நான் அணிவேன்
நல்லருள் பொழிவாயே - ஸ்வாமி  நல்லருள் பொழிவாயே
கோரின வரமெல்லாம் தந்திடும் தேவா
கோடி கோடி நமஸ்காரம் சுவாமி 

No comments:

Post a Comment