Monday, October 23, 2017

ஸ்ரீ காந்திமதி அம்மைப் பிள்ளைத் தமிழ் - வாராதிருந்தால் இனி நான் உன்


ஸ்ரீ காந்திமதி அம்மைப் பிள்ளைத் தமிழ் 

வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
மணியால் இழைத்த பணி புனையேன்
பேராதரத்தினோடு பழக்கம் பேசேன்
சிறிதும் முகம் பாரேன்,
பிறங்கு முலைப் பால்  இனிதூட்டேன்
பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத்
தேரார் வீதி வளங் காட்டேன்,
செய்ய கனிவாய் முத்தமிடேன்,
திகழும் மணித் தொட்டிலில் ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக  வருகவே --

ஸ்ரீ அழகிய சொக்கநாத பிள்ளையவர்கள்
அருளியது

(இப்பிள்ளைத் தமிழைப் பாடி
நம் குழந்தைகளைத் தாலாட்டலாமே)

சிவம் சுபம் 

No comments:

Post a Comment