Sunday, October 22, 2017

காக்கும் கடவுள் கரியவன் திருவடி (Mohanam)


Mohanam

காக்கும் கடவுள் கரியவன் திருவடி பணிந்து பிறவிப் பிணி யறுப்போம்

மீனாய் மனுவைக் காத்தவன், கூர்மமாய் மலையைத் தாங்கியவன்... அந்த
I
பன்றியாய் உலகை மீட்டவன், பரசிவன் பதத்தை  நாடுபவன்,
சிம்ம மாய் பாலனைக் காத்தவன், வாமனனாய்  பலிக் கருளியவன்

பரசு ராமனாம் ரேணுகைத் திருமகன், ராமனாய் தர்ம வழி நடந்தவன், நடந்ததை கண்ணனாய் உறைத்தவன், பின் புத்தனாய் அஹிம்ஸை போதித்தவன்

மோஹினியாய் அமுதம் அளித்தவன், ஞான அயக்ரீவனாய் அன்னை துதி யருளியவன், வ்யாசனாய் வேதம் வகுத்தவன், தன்வந்த்ரியாய் ரோஹம் தீர்ப்பவன்

கலியில் திருமலையில் நிற்கும் திருமால் (நம்) கலி தீர்க்க கல்கியாய் வந்திடுவான். எத்தனை எத்தனை ரூபம்,  எத்தனை எத்தனை நாமம், அத்தனையும் நம்மை காக்கும் கவசம்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment