Sunday, October 22, 2017

பாலனுக்காய் அன்று வந்தவன்


ராகம்....

பாலனுக்காய் அன்று வந்தவன், ஒரு பாமரனுக்காய் இன்று வந்தானே

(அன்று) அரண்மனைத் தூணுடைத்து வந்தவன்,
ஆலயம் விட்டின்று வந்தானே

தனியாய் அன்று வந்தவன், (நம்)  தாயை அணைத்தின்று வந்தானே, (அன்று)  அரக்கனை அழிக்க வந்தவன், (இன்று) அடிமைக் கருள வந்தானே

நினைந்தாலே வந்திடுவான், நிறைமதி ஞானம் தந்திடுவான்,
அன்பருள்ளமே அவன் அஹோபிலம், அளப்பறியாக் கருணை நரசிம்ஹம்...லக்ஷ்மி  நரசிம்ஹம்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment