Sunday, October 22, 2017

தோன்றியது சிவக் கண்மணியாய்.



முருகா சரணம்

தோன்றியது சிவக் கண்மணியாய்.
அறு மழலையாய் மிதந்தது (சரவணப்) பொய்கையில்.
பாலுண்டது கார்த்திகைப் பெண்டிரிடம்.
ஒன்றாய் இணைந்தது அன்னை மடியில்.

சினந்து நின்றது பழனியில்.
சினம் தணிந்தது தணிகையில்.
தந்தை தோளமர்ந்தது ஸ்வாமிமலையில்.
வேல் பெற்றது சிக்கலில்.

சூரனை ஆட்கொண்டது செந்தூரில்.
மணமுடித்தது திருப் பரங்கிரியில்.
இருவருடன் ஆடியது பழமுதிர் சோலையில்.
இன்றொளிர்வது சென்னை கந்த கோட்டத்தில்.

அருணகிரிக் கருளியது அருணாசலத்தில்.   
வள்ளலுக்கு காலைக் காட்சி தணிகையில்.
சிதம்பரனார்க் கருளியது திருப்போரூரில்.
பாம்பனாருக்குத் துணை சென்னை மருத்துவமனையில்.

குன்று தோறும் ஆடுவான்.
ஆடு மேலமர்வான்
அழகிய மயிலேறி வருவான்.
பால தண்டாயுதன்.
கரும்பேந்திய செட்டி.
வேலேந்திய வீரன்.

சஷ்டி கவசம் பூணுவான்,
சங்கர புஜங்கத்திற் காடுவான்.
திருப்புகழ் மாலை சூடுவான்,
கலி வெண்பாவில் நெகிழ்வான்,

(கந்தர்) அலங்கார ப்ரியன்
போரூர் சந்நிதி முறை ஏற்பான்,
குமாரஸ்தவத்தில் லயிப்பான்
அருட்பா அமுதுண்ணுவான்,

"குருகுஹ" சங்கீதம் செவிமடுப்பான்.
உக்கிர வழுதியாய் மதுரை ஆள்வான்.
பகை கடிவான்.
அன்பருக் கனுபூதி நிலை யருள்வான்.....

ஆறுமுகப் பன்னிரு கண்ணன்/கைய்யன்.

சிவம் சுபம்.
[6:11 PM, 10/20/2017] Appa: 2

அன்னையை மடிவைத்த அற்புதனே,
அழகிய சிங்கப் பெருமானே

தன்னையே தந்திடும் தயாகரனே, என்னையும் ஆட்கொள் வா சுபகரனே

மச்ச கூர்ம வராஹமும் ஆனாய்,  வாமன பரசு ராமனுமானாய், ராம கருஷ்ண புத்த வடிவும் கொண்டாய்,  ஆயினும் உன் போல் யார் அருள்வாரே...

தாமதியாதருளும் கோமதி சோதரா, தருணமறிந்தருளும் பரம க்ருபாகரா, அங்கிங் கென்றென்னை அலையவிடாமல் என்னருகில் கோயில் கொண்ட வள்ளலே

நந்தவனத்துறை நாயகனே, பவ பந்த விமோசன நாரணனே,
என் மனம் அதனை செம்மை யாக்கி அதனுள் உறை வா அஹோபிலனே

சிவம் சுபம்

No comments:

Post a Comment