Sunday, October 22, 2017

அன்னையை மடிவைத்த அற்புதனே

2

அன்னையை மடிவைத்த அற்புதனே,
அழகிய சிங்கப் பெருமானே

தன்னையே தந்திடும் தயாகரனே, என்னையும் ஆட்கொள் வா சுபகரனே

மச்ச கூர்ம வராஹமும் ஆனாய்,  வாமன பரசு ராமனுமானாய், ராம கருஷ்ண புத்த வடிவும் கொண்டாய்,  ஆயினும் உன் போல் யார் அருள்வாரே...

தாமதியாதருளும் கோமதி சோதரா, தருணமறிந்தருளும் பரம க்ருபாகரா, அங்கிங் கென்றென்னை அலையவிடாமல் என்னருகில் கோயில் கொண்ட வள்ளலே

நந்தவனத்துறை நாயகனே, பவ பந்த விமோசன நாரணனே,
என் மனம் அதனை செம்மை யாக்கி அதனுள் உறை வா அஹோபிலனே

சிவம் சுபம்

No comments:

Post a Comment