Sunday, October 22, 2017

அம்மையும் அப்பனும்



அம்மையும் அப்பனும் கொஞ்சி மகிழும்  மழலைச் செல்வமாம்
முருகனை நாமும்
வாயாறப் போற்றி
மனதாரப் பணிந்தே
புவியில் நாமே சுகித்திருப்போமே.

சூரனை ஆட்கொண்ட சுப்பிரமணியனை,
தேவரைக் காத்த சேனாபதியின் திரு மணக் கோலத்தை குன்றத்தில் கண்டே மனமொன்றி நாமே
களித்திருப்போமே

சஷ்டி கவசமும்  சங்கரர் புஜங்கமும்,  சந்நிதி முறையும், திருப்புகழும்,
அருட்பா அமுதும் படைத்து நாமே
அனுபூதி நிலையை  எட்டிடுவோம்,  அறுமுகன் நிழலில் நிலைத்திருப்போம்.

சிவம் சுபம்.

No comments:

Post a Comment