Sunday, October 22, 2017

அகிலம் உய்ய வந்த - ஆலவாய் அமுதே



அகிலம் உய்ய வந்த - ஆலவாய் அமுதே
இறைவியே மீனாளே -
ஈசனின் முத்தனமே -

உக்கிரவழுதியின் தாயே -
ஊழ்வினையறுக்கும் மாயே -
எழில் மரகதச் சிலையே 
ஏழுலகும் ஆளும் ராஜ மாதங்கியே

ஐந்தெழுத்தின் சாரமே
ஒப்பிலா குறள் ஏற்ற சங்கத் தமிழே
ஓங்கார சிவையே
ஔதார்ய சுபமே....

அங்கயற்கண்ணியே
அடிமலர் சரணம்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment