Sunday, October 22, 2017

சாயி நாமமே அமுதம்

OM

சாயி நாமமே அமுதம்
சாயி வாய்மொழியே வேதம்
சாயி சத்சரிதம் சத்யம்
சாயி மார்க்கமே சன்மார்க்கம்

சாயி கரம் சுபகரம்
சாயி ஹ்ருதயம் கைலாயம்
சாயி ருபம் பரப்ரஹ்மம்
சாயி பதம் பரம பதம்

சாயி அருள்வார் நல் இச்சை
சாயி பொழிவார் நல் ஞானம்
சாயி முடிப்பார் நற்கிரியை
சாயி தருவார் நற்பலன்

ஈறெழுத்து மந்திரம் "சாயி"
இணையில்லா தந்திரம் "சாயி"
 துணை நமக்கென்றும் "சாயி"
தூய வாழ்வளிக்கும் "சாயி"

சிவம் சுபம்.

No comments:

Post a Comment