Sunday, October 22, 2017

கங்கை கொண்ட சோழபுரம் (Vasantha)

வசந்தா

கங்கை கொண்ட சோழபுரம்
கங்காதரன் வாழும் புரம்

ப்ரஹ்மாண்ட நாயகன் புரம்
ப்ரஹதீஸ்வர சிவ புரம்

ப்ரஹ்மாண்ட கௌரீ புரம்
பெரியநாயகியின் அந்தப்புரம்,
பெரிய நந்தீசன் காக்கும் புரம்
அரிய பூலோக கைலாய புரம்

கலைகளின் பிறப்பிடம்
கவின் மிகு கோபுரம்
அன்னாபிஷேக புரம்
அருள் சுரக்கும் ஆனந்த புரம்

சிவம் சுபம்

No comments:

Post a Comment