Sunday, October 22, 2017

அனுஷத் துதித்த அற்புத தெய்வம்

ஓம்

அனுஷத் துதித்த அற்புத தெய்வம்
ஆதிரையன் மறு உருவாம் தெய்வம்
இருபாதம் பதித்து நட மாடும் தெய்வம்
ஈச்சங்குடி அன்னை ஈன்ற தெய்வம்

உயர் வேதம் காக்க உதித்த தெய்வம்
ஊழ்வினை மாற்றும் உத்தம தெய்வம்
எளிமை வடிவானத் துறவறத் தெய்வம்
"ஏணிப்படி" சிவன் சாரின் முன் வந்த தெய்வம்

ஐயமில்லாதருளும் காமகோடி தெய்வம்
ஒப்பிலா சந்திர சேகர தெய்வம்
ஓரிக்கை வாழும் ஒரே
தெய்வம்
ஔத்ர்ய வடிவ ஆனந்த தெய்வம்

சிவம் சுபம்.


No comments:

Post a Comment