Sunday, October 22, 2017

ஆறுபடைத் தலைவா



ஆறுபடைத் தலைவா, வா ஆறுமுகப் பேரிறைவா வா

 (உன்)  குன்றக் குமரக் கோலம்
குன்றா அருள் மணக் கோலம்

பழனி மலைப் பழமே வா
பஞ்சாம்ருதத் தேனே வா
பழமுதிர்சோலைத் தேவே வா, இரு மாதர் உடனாடும் கோவே வா

செந்தூர்பதி வாழ் பாலா வா,
சூரனை ஆட்கொண்ட வேலா  வா,
தணிகை மலை நாதா வா
தாபம் தீர்க்கும் பாதா வா

தந்தை தோளமர் குஹனே வா,
எந்தையே ஸ்வாமி நாதனே வா
தருமபுரத் துறை இளவலே வா (என்)
கரும வினை களை முத்துக் குமரனே வா

சிவம் சுபம்.

No comments:

Post a Comment