Monday, May 22, 2017

Sri Lakshmi Narasimha Potri - 108



ஓம் நமோ வக்ரதுண்டாய
ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கன் 108 போற்றி


தூணைத் தாயாய்க் கொண்டோய் போற்றி
தூயவனைக் காக்க உதித்தோய் போற்றி
சிம்ஹ முகச் செம்மலே போற்றி
சிறு குழந்தை மனத்தனே போற்றி
சிவந்த உக்ர ஜ்வாலனே போற்றி

புருஷர்களில் உத்தமனே போற்றி
மஹா பராக்ரம தீரனே போற்றி
மஹா விஷ்ணுவே போற்றி
ஜ்வாலா முகனே போற்றி
பிடரிகள் சீலிர்ப்பாய் போற்றி

ஸ்வாதி நட்சத்திரனே போற்றி
ஸ்வாதீனமாய் வாழ அருள்வோய் போற்றி
சதுர்த்தியில் வந்தோனே போற்றி
ப்ரதோஷக் காலனே போற்றி
ப்ரஹ்மாண்ட வடிவனே போற்றி

முக்கண்ணனே போற்றி
மும்மலம் களைவாய் போற்றி
மூவுலகளந்த பாதனே போற்றி
முன்னின்றருள்வோய் போற்றி
முத்தி வரம் அளிப்போய் போற்றி

அரக்கனை மடிவைத்தாய் போற்றி
அரண்மனை வாயில் அமர்ந்தோய் போற்றி
அகங்காரம் கிள்ளிக் களைந்தோய் போற்றி
அன்பனை அணைத்தோய் போற்றி
அவன் சந்ததி காத்தோய் போற்றி

ஆரண்யத் தலைந்தோய் போற்றி
அஹோபிலத் தய்யனே போற்றி
ப்ரஹ்லாத வரதா போற்றி
ப்ரளய பயங்கரா போற்றி
பாவன மூர்த்தியே போற்றி

வேடுவர் போற்றும் தேவா போற்றி
வேடுவப் பெண்ணை மணந்தாய் போற்றி
வேடுவ செஞ்சு நாதா போற்றி
வேண்டத் தக்கது அறிவோய் போற்றி
வேண்டுமுன் முழுதும்அருள்வாய் போற்றி

க்ரோட சிம்ம மூர்த்தியே போற்றி
க்ரோதம் களைவோய் போற்றி
காரஞ்ச மூர்த்தியே போற்றி
கடிகைத் தவ வடிவே போற்றி
த்யானத் தவ யோகனே போற்றி

அஞ்சனை செல்வனுக் கருளினை போற்றி
பஞ்சம் பசி பிணி தீர்ப்பாய் போற்றி
பய நாசனனே போற்றி
பந்த மோசனனே போற்றி
பக்க துணை யாவாய் போற்றி

பரசுராமன் துதி கொண்டாய் போற்றி
பார்க்கவ நரசிம்மனேபோற்றி
சத்ர வட சிம்மனே போற்றி
சக்கரத் தமர்வோய் போற்றி
சங்கடம் தீர்ப்போய் போற்றி

நரஹரி தேவனே போற்றி
நவ நவ சிம்மனே போற்றி
நவசக்தி சோதரனே போற்றி
பவவினை அறுப்போய் போற்றி
சபமருள் லக்ஷ்மீ நரசிங்கனே போற்றி

கார்த்திகையில் கண் மலர்வோய் போற்றி
நேர்த்தியாய் காட்சி தருவாய் போற்றி
சங்கம் சக்கரம் ஏந்துவோய் போற்றி
பங்கம் வராது காப்போய் போற்றி
ப்ரஹ்லாத வரதனே போற்றி

மாதேவன் துதிகொண்டாய் போற்றி
மந்த்ர ராஜ பதமே போற்றி
ஆதி சங்கர கராவலம்பனே போற்றி
உடையவர் உள்ளத் தரங்கனே போற்றி
உத்தம தேசிகரின்  வேதாந்தமே போற்றி

ஸ்ரீ ராகவன் துதி கொண்டாய் போற்றி
ஸ்ரீனிவாசனுக்கு முன்னவனே போற்றி
ஸ்ரீதேவி மருவும் மாலோலனே போற்றி
வராஹ நரசிம்ஹனே போற்றி
வரமழை பொழி வரதனே போற்றி

கெடிலக்கரை அமர்ந்தோய் போற்றி
பரிக்கல் வாழ் பகவனே போற்றி
மரிக்காது வாழ அருள்வோய் போற்றி
கொள்ளிடக் கரை அமர்ந்தோய் போற்றி
காட்டழகிய சிங்கனே போற்றி

கம்பத் தமர்ந்த கருணையே போற்றி
கம்பன் காதை கேட்டோய் போற்றி
வம்பு சூது மாய்ப்போய் போற்றி
அரவணை நிழல் அமர்வோய் போற்றி
அன்பர் உள்ளத் தரங்கனே போற்றி

அனந்த புரி யோகனே போற்றி
ஆனந்த வாரிதியே போற்றி
பட்டத்ரி கண்ட சிங்கனே போற்றி
பாவன நாராயணியனே போற்றி
பவரோக நிவாரணனே போற்றி

பூவரசங் குப்பனே போற்றி
அந்திலி வாழ் மெய்யனே போற்றி
அல்லிக் கேணி முன்னவனே போற்றி
அண்ணல் விவேகானந்தர் மடல் ஏற்றவனே போற்றி
அருணகிரியின் தமிழுண்ட அழகா போற்றி

பரணி வலம் வரும் சிங்கா போற்றி
தரணி புகழ் நெல்லை ஊர்க்காடா போற்றி
மாண்டவ்ய ரிஷி தொழுத மாதவா போற்றி
மடைதிறந்த வெள்ளமாய் அருள் கற்பக வ்ருக்ஷா போற்றி
தடை தகர்த்தருள் தாதா போற்றி

ஐயாற்று அய்யரின் அகம் கவர்ந்தாய் போற்றி
ப்ரஹ்லாத பக்தி விஜயமே போற்றி
ஸ்வாதித் திருநாள் நாயகனே போற்றி
முத்துஸ்வாமியின் இசை மணியே போற்றி
ராமதாசரின் தமிழ் ரசிகனே போற்றி

சரப சிவனுடன் கலந்த சிம்மமே போற்றி
அரியும் அரனும் ஒன்றென்றாய் போற்றி
அழைத்தக் கணமே வரும் அருளே போற்றி
ஆழ்வார் பாசுரம் பாடி அழைப்போம் போற்றி
ஆண்டாளின் துதி சூட்டி மகிழ்வோம் போற்றி

ஆடி ஆடி அகம் கரைவோம் போற்றி
பானகம் படைத்துப் பாடி பாடி மகிழ்வோம் போற்றி -  எக்கணமும் "நரசிங்கா" வென்று உனை நாடி நாடி சரணடைவோம் போற்றி போற்றி

சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

No comments:

Post a Comment