Sunday, August 19, 2018

கொடியிடையாள் (Ghambeera Naattai)




கம்பீர நாட்டை

கொடியிடையாள், கோலவிழியாள் அருள்பொழிவாள் (மெய்) அன்பருக்கே.

முண்டகக்கண்ணி, முக்கண்ணி,
மருந்தீஸ்வரி அவள் வடிவுடையாள்.

மல்லீஸ்வரி அவள் காரண காரியம் அறிந்தருள்வாள்,
வெள்ளீஸ்வரி அவள் காமாட்சி, சரபேஸ்வரி அவள் சூலினி மாலினி, காபாலீஸ்வரி கற்பக நாயகி பொற்பதம் பணிந்து நற்கதி பெறுவோம்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment