Sunday, August 19, 2018

அத்வைதாச்சார்யரே சரணம் (Sri Sankara Jeyanthi)



அத்வைதாச்சார்யரே சரணம்
ஆதி சங்கர பகவத் பாதரே சரணம்

காலடியில் அவதரித்தோய் சரணம்.
முன்பு ஆலடியில் உபதேசித்தோய் சரணம்.

சிவானந்த லஹரியில் திளைத்தோய்  சரணம்,
சௌந்தர்யலஹரி புனைந்தோய் சரணம்.
அரிக்கற்புத மாலைகள் சூட்டினோய் சரணம்
ஷண்மத ஸ்ருதி ஸ்ம்ருதி நாதா சரணம்

நால் மடம் அமைத்தோய் சரணம்.
நால் வேதப் பொருள் உரைத்தோய் சரணம் 
புராண ஆகம நிதியே சரணம்.
கர்ம தர்ம சீலமே சரணம்

காமாக்ஷி உக்ரம் தணிவித்தோய் சரணம்
காமகோடி ஸர்வஞ்னே சரணம்.
தானே அதுவான தேவா சரணம்.
"நான்" அகன்றோர் உள்ளம் உறைவோய் சரணம்.

முழு முதல் குருவேசரணம்
முக்தி மார்க்கம் சமைத்தோய் சரணம்
பரத கண்டம் கண்ட பகவனே சரணம்
இந்துக்களின் இதயத் துடிப்பே சரணம்

ஈடிணையில்லா இறை வடிவே சரணம்

சிவம் சுபம்

No comments:

Post a Comment