Sunday, August 19, 2018

ஆலடிவாழ் குருநாதா (Mahaperiyavaa)



ஆலடிவாழ் குருநாதா
ஆதி அந்தம் இல்லா குருநாதா 
வேத வடிவ குருநாதா
ஜ்யோதி வடிவ குருநாதா

ஆலிலை தாங்கும் குருநாதா
அகிலமே வணங்கும் குருநாதா
கீதாச்சார்ய குருநாதா
தர்மஸ்வருப குருநாதா

மீனவர் தவமே குருநாதா
வேத வ்யாஸ குருநாதா
பாரதாச்சார்ய குருநாதா
பவவினை களையும் குருநாதா

காலடித் தோன்றலே குருநாதா
வேத உத்தாரண குருநாதா
அத்வைத ஷண்மத குருநாதா
சநாதன சங்கர குருநாதா

உடுப்பி வாழ் உத்தம குருநாதா
"இரண்டே" என்ற குருநாதா
இணையில்லா மத்வ குருநாதா
த்வைத சத்வ குருநாதா

பெரும்புதூர் அளித்த குருநாதா
பெரும் த்யாகச் செம்மலே குருநாதா
விசிஷ்டா த்வைத குருநாதா
விசேஷ ராமானுஜ குருநாதா

துங்கா தீர குருநாதா
தூய ராகவேந்தர குருநாதா
ப்ரஹ்லாதன் வடிவே குருநாதா
பேரரருள் பொழி குருநாதா

வங்காளச் செம்மலே குருநாதா
விவேக ஆனந்தம் அருள் குரு நாதா
அகண்ட அத்வைத சார நாதா (சாராதா நாதா)
அற்புத ராமக்ருஷ்ண குருநாதா

மதுரையின் மாதவமே குருநாதா
மரணத்தை வென்ற குருநாதா
மீனாக்ஷி செல்வமே குருநாதா
குழந்தையானந்த குருநாதா 

காஞ்சி அளித்த குருநாதா
காமாக்ஷி செல்வமே
குருநாதா
ரமணரை அளித்த குருநாதா
ரம்ய சேஷாத்ரி குருநாதா 

திருச்சுழித் தவமே குருநாதா
திருவண்ணாமலை குருநாதா
நான் யார் என்ற குருநாதா
நானிலம் தொழும் ரமண குருநாதா

வடலூர் வள்ளலே குருநாதா
சமரச சன்மார்க்க குருநாதா
ஜீவ காருண்ய குருநாதா
ஜோதி ப்ரகாச ராமலிங்கா

ஷிரடி வாழும் குருநாதா
சிறந்ததை அருளும் குருநாதா
சமயம் கடந்த குருநாதா
சமயம் அறிந்தருள் சாயீ நாதா

பர்த்தி வாழும் குருநாதா
ப்ரேம ஸ்வரூபா குருநாதா
பக்தவாத்ஸல்ய குருநாதா
சேவானந்த சாயி நாதா 

மதுர  (மதுரை) கண்ட இசையரசி
மறைந்தும் மறையாத கொடை அரசி
பாடுவோர்க்கெல்லாம்
குரு மாதா
சிவத்துள் கலந்த சுப மாதா

விழுப்புரம் கண்ட மெய்ப்பொருளே
விண்ணோர்க்கும் கிட்டா  அரும்   பொருளே
நடமாடும் தெய்வமே பரமேசா
நம்பிப் பணிந்தேன் பரமாச்சார்ய. 

குருநாதா ஸத் குருநாதா 
குருநாதா ஸத் குருநாதா 
குருநாதா ஸகல குருநாதா 
குருநாதா ஸர்வ குருநாதா 

பதம் தந்தாள் ஸர்வ குருநாதா.

சிவம் சுபம்.

No comments:

Post a Comment