Sunday, August 19, 2018

படைத்தவள் நம்மை மீனாக்ஷி (Mohanam Bhajan Maya Bazaar Tune)



(ப்ருந்தாவனமும்....tune)

படைத்தவள் நம்மை மீனாக்ஷி
பாலித்தருள்பவள் மீனாக்ஷி
கடம்ப வனத்தாள் மீனாக்ஷி
கமல மலர்த்தாள் மீனாக்ஷி

கயற்கண்ணாள் மீனாக்ஷி
கயிலைநாதனை கவர்ந்திழுத்தாள்
சுடலை சுற்றும் ஆண்டி யப்பனை
சுந்தரானாக்கி கரம் பிடித்தாள்

மதுரையை சிவராஜதானியாய்
மாற்றிய  மீன லோசனி,
தன் கர செங்கோலை  அய்யனுக்களித்து,
பச்சைக் கிளி ஏந்தும் தளிர் கரத்தாள்

சித்தரைத் திருவிழாக் கண்டவர்க்கு,
இத்தரையில் இனிப் பிறவி இல்லை,
மாற்று குறையா மரகதம் அவளே
வற்றாக் கருணை வான்முகிலே.

நம்முள் இருப்பது மீனாக்ஷியே
நற்றுணையாவது சுந்தரமே
நற்றுணையாவது சுந்தரமே
நம்முள் இருப்பது மீனாக்ஷி.

சிவம் சுபம்

No comments:

Post a Comment