Sunday, August 19, 2018

மாதவன் எடுத்தான் பல அவதாரம் (Neelamani)

OM  (Neelamani)

மாதவன் எடுத்தான் பல அவதாரம், மாதேவன் கொண்டான் ஒரே அவதாரம். (மஹா பெரியவா அவதாரம்).

ஆலடி காலடி காமகோடி இறைவன், காலத்தை வென்ற ஸர்வஞ்ஞன்.

இருவர் காணா பாதமதை இப்புவியில் பதித்து நடந்தாரே, இமயம் முதல் குமரி வரை திருவருள் மழை பொழிந்தாரே.

ரமணரைக் கண்டு வியந்தாரே, சேஷாத்ரி ஆவேனா என்றாரே, தவம் செய் தக்ஷிணா மூர்த்தி அவரே நம் அவம் களையும் கருணா மூர்த்தி

பசிப் பிணி நீங்க பிடி அரிசி திட்டம், ஞானப் பசி தூண்ட வேதாகம பாடம், அநாதைக்கும் முக்தி அளிக்கும் கருணை,  அடி பணிந்தோர்க்கு அவரே அருணை.

சைவ வைணவ பாலம்,
ஸர்வ ஸம்மத பரமாச்சார்யம், ஸகலரும் உய்ய ஆறாம் வேதம், ஸர்வ மங்கள சந்திர சேகரம். 

சிவம் சுபம்.

No comments:

Post a Comment