Sunday, August 19, 2018

எல்லாம் தருவார் ஈசனே (Pradosha Song)

[4:40 PM, 2/12/2018] Appa: சிவராத்ரி/ப்ரதோஷ கூட்டுப்ரார்த்தனை - 7

ஸ்ரீ லிங்காஷ்டகத்தினை பிரதோஷ வேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் ஒருங்கே உண்டாகும்.

நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.

சிவம் சுபம்


சிவராத்திரி / பிரதோஷ கூட்டு பிரார்த்தனை 7

வடலூர் வள்ளல்  பெருமான்  -
திருவருட்பா - சிவா த்யான/திருநீற்று மஹிமை - அன்பே சிவம்

எல்லாம் தருவார் ஈசனே 

ஊர் தருவார்  நல்ல ஊண்  தருவார் உடையும் தருவார்
பார் தருவார் உழற் கேர் தருவார் பொன் பணந்தருவார்
சோர் தருவார் உள்  ளறிவு கெடாமல் சுகிப்பதற்கிங்(கு)
கார் தருவார் அம்மையார் தரு பாகனை யன்றி நெஞ்சே

எல்லாம் அளிக்கும் திருநீறு

பாடற்  கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய  அடியவர் தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சே நீ அஞ்சேல் என் ஆணை கண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே

அன்பே இறை

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும்  வலைக்கு உட்படு பரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளி  அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பர சிவமே

சிவம் சுபம் 

No comments:

Post a Comment