Sunday, August 19, 2018

அலைமேல் வளர் மகளே (Bilahari)


Bilahari

அலைமேல் வளர் மகளே, அலை பாயா மனம் அருள்பவளே... பாற்கடல்..

திருச்சானூர் வாழ்பவளே, திருமலையான் மனம் உறை திருமகளே...

(சுகந்த) மணம் நிறை மலர் மகளே, மங்கையர் மங்கலம் காக்கும் குலமகளே, மாதேவன் சூடும் வில்வத் துறைபவளே,   மாதவனாம் அஹோபில  ஹரி நாயகியே.

கலைமகள் தொழுதிடும் வித்யா லக்ஷ்மியே, பிரமனை ஈன்ற சந்தான லக்ஷ்மியே, அனைத்து நலம் பொழி அஷ்ட லக்ஷ்மியே, அடிமலர் பணிந்தேன் அருள் சுப லக்ஷ்மியே

சிவம் சுபம்

No comments:

Post a Comment