Tuesday, March 22, 2016
எழுந்தருள்வாய் ஞாயிறே (Bhoopalam)
பூபாளம்
எழுந்தருள்வாய் ஞாயிறே, இருள் களைந்தருள்வாய் கதிரவனே
அருணனை சாரதியாய் கொண்டவனே
கருணனை ஈன்ற புண்ணிய்னே
பீஷ்ம முக்தி உத்த ராயணனே, சகல
தோஷ நிவாரண சிவ சூரியனே,
ஸந்த்யா வந்தன நாயகனே
ஷண்மதம் பரவும் சௌரனே
நவகோள்களின் நடு நாயகனே
அகத்தியன் போற்றிய ஆதித்யனே
அண்ணலுக் கருளிய ஆதவனே
இன்னல் களைவதில் முதல்வனே
சிவம் சுபம்
ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் (prayer)
ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் அவர்கள் திருவண்ணாலை கம்பத்தடியான் கோயிலில் அருளியது :
செம்முருகா, உன் அடியைச் சேர்ந்த பிணியாளர் இம்மையிலே நோயற்று இனிது இருந்தார். எம்மைய்யா, இம்மொழி மெய்யாகில், இக்குழவி................. (Name of the patient) செம்மை நலம் இன்று அடையச் செய்.
இந்த வெண்பாவை (ஒரு தாளில் எழுதி வைத்து) தினமும் மிகுந்த ஸ்ரத்தையுடன் முருகப் பெருமானையும் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளையும் நினைந்து உருகித் தொழுது காலை, மதியம், மாலை மற்றும் உறங்குமுன் 3 முறை ஜெபித்துப் பணிந்தால் நோய் நீங்கி சுகம் பெருவர் என்று மதுரை ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் தெரிந்து கொண்டேன்.
All of us can recite this sloga for speedy recovery of our ailing friends n relatives.
சிவம் சுபம்.
audio
வர வேண்டும் வர வேண்டும் குரு நாதரே (Siva Ranjani)
Siva Ranjani
வர வேண்டும் வர வேண்டும் குரு நாதரே, தர வேண்டும் தர வேண்டும் (உம்) பத மலரே
க்ஷேமம் அருளும் சேஷாத்ரி நாதரே! குறைவிலா வாழ்வருளும் குழந்தை யானந்தரே!
காவேரி அன்னை தொழும் காமாக்ஷி புத்ரரே! ராஜ மாதங்கி மீனாக்ஷி சிசுவே! ஊஞ்சலூர் வாழும் காஞ்சன கரத்தாரே! அரச போகம் அளிக்கும் அரசரடி தூயரே!
ஷண்முக ரமணரை அறிவித்த சிவையே,
மாண்டவரை மீட்ட மாண்புடை மேருவே,
வேற்றுமை களைந்தெம்மை இணைக்கும் சேதுவே, வேண்டுவோர் வேண்டுமுன் அருளும் ஈஸ்வரரே
அன்னை காமாக்ஷி அருட் குரு வடிவே, (AmirthavarshiNi)
AmirthavarshiNi
அன்னை காமாக்ஷி அருட் குரு வடிவே,
அடிமலர் பணிந்தேன், அனுக்ரஹம் செய்வாயே
நாம கோடீஸ்வரி, ஏகாம்பரேஸ்வரி, காம கோடிஸ்வரி, சந்த்ர சேகரீ
பரமாச்சார்ய பர ப்ரஹ்ம ரூபிணி,
தவக்கோலம் கொண்டெம் அவம் நீக்கும் தேவி, கையில் கிளி ஏந்தும் கதம்பவன மயிலே, உன் பதமலர் எந்தன் சிரம் வைத் தாள்வாயே
சுநாத வினோதினி, சுக ஸ்வரூபிணீ,
சிம்ஹ வாஹினி, ச்ருத ஜன பாலினி,
அநாத ரக்ஷகி, அமிர்த வர்ஷிணி,
ஷண்மத ரூபிணி, சங்கரி, பாவனி
சிவம் சுபம்
Siva-Saktheeaaa, Sri-Nivaasaa (Revati)
Revathi
Siva-Saktheeaaa, Sri-Nivaasaa
Sritha jana paalana Hari-Haraa
Maathavaa! Mahaa Devaa!
Artha Naaree, Ashta Lakshmi Hrudaya Vihaari, Parameswaraa Paranthaamaa, Shanka Chakra Ghadhaadara Thri- Sooladhaari
Sayana Rangesaa, Natana Sabesaa, Vedhaachaarya, Geethaachaarya,
Rama-swaroopaa, Raama naathaa,
Kaama Janagaa, Kathir-kaama Janagaa
Panchaaksharaa, Ashtaaksharaa
Lingothbavaa, Sthambothbavaa,
Abhisheka priya, Alankaara priya,
Paasupathaesaa, Paartha saarathi
Viswa-naathaa, Viswa-rakshagaa,
Soma Sundaraa, Surya Naaraayanaa
Yaeka Sivaa Anaeka Naaraayanaa
Naadha Sivaa Naama Naaraayanaa
Jothi Sivaa, Roopa Naaraayanaa
Aathi Sivaa, Anantha Naaraayanaa
Sadhaa Sivaa......Sathya Naaraayanaa
Sakthi Sivaa..... Sankara Naaraayanaa
Sivam Subam
மங்கலமாய் வாழ அருள்வாய் (Surutti)
Suruti
மங்கலமாய் வாழ அருள்வாய், மா மதுரைத் தாயே, மரகத மீனாளே!
அன்போடும் பண்போடும் பக்திநெறியோடும் பாரெல்லாம் போற்றும் வண்ணம் பக்தி நெறியோடும்......
கல்வி, கேள்வி, கலை ஞானம் வளர்த்து, காலம் தவறாமல் கடமைகள் முடித்து, நோயற்ற உடலோடும் நிறைவான மனதோடும், நின் காலடி மலரைக் கனவிலும் மறவாது.......
Paramaeswara Paahi Paahi (Varaali)
VaraaLi
Paramaeswara Paahi Paahi
Paramaachaarya Paahi Paahi
Sankara Paahi Paahi
Sankaraachaarya Paahi Paahi
Swaaminaatha Paahi Paahi
Mahaa Swaami-naatha Paahi Paahi
Kamakoteesa Paahi Paahi
Kaamaakshi Roopa Paahi Paahi
Veda udhdhaaraNa Paahi Paahi
Aagama nipuNa Paahi Paahi
Aathma naatha Paahi Paahi
Adhputha Paathukaa Paahi Paahi
Vignesam vigna nivaaraNam. (aarabi)
Aarabi
Vignesam vigna nivaaraNam.
Shanmugam saravaartha saathagam
Saasthaaram samastha paapa kshayakaram, Vishnum viswa rakshagam
Sowbaagya Lakshmeem,
Gnana Saraswatheem, Durghaam duritha nivaraaNeem, KaaLeem kali kalmasha nasaneem, Paraa Saktheem baktha vasankareem
Nrusimham nirbayam,
Bairavam Bava naasanam,
Aanjaneyam asaadhya saadhakam, Sivam Subam MangaLam
Venkataachala Pathaey (Naattai)
Naattai
Venkataachala Pathaey
Vaendum varam aruLum dayaa nidhae
Saptha giri vaasanae
SaraNaagatha vathsalanae .... Sri
Kapileswaran maithuNanae
Kara kamalathaaL Naathanae
Shanka Chakra Gadhaa dharanae, sankata naasananae... Sri
Thiagaraaja Raamanae,
Syaama Krishna Varadhanae,
Guruguha priya Maamanae,
Guru Purandhara Vittalanae
Sivam Subam
Venkataachala Pathaey
Vaendum varam aruLum dayaa nidhae
Saptha giri vaasanae
SaraNaagatha vathsalanae .... Sri
Kapileswaran maithuNanae
Kara kamalathaaL Naathanae
Shanka Chakra Gadhaa dharanae, sankata naasananae... Sri
Thiagaraaja Raamanae,
Syaama Krishna Varadhanae,
Guruguha priya Maamanae,
Guru Purandhara Vittalanae
Sivam Subam
திருமகள் அளித்த தவ மூர்த்தி (Hindholam)
Sri Mahaalakshmi is the Holy Mother of Sri Paramaacharya Swami
Hindolam
திருமகள் அளித்த தவ மூர்த்தி, தினமும் பாடுவோம் உம் கீர்த்தி
அனுஷம் அளித்த அனுக்ரஹ மூர்த்தி, அனைத்து தோஷமும் நீக்கும் குரு மூர்த்தி
காஞ்சியில் வாழ் கருணா மூர்த்தி, காமாக்ஷி சமான தயா மூர்த்தி, காமகோடி சந்த்ர சேகர ஸரஸ்வதி,
கதி என்றைடைந்தோம் உம் சந்நிதி
தூய தவ சீல தக்ஷிணாமூர்த்தி, மன மாசகற்றும் க்ருஷ்ண மூர்த்தி, பாமரரும் போற்றும் பரமாச்சார்ய மூர்த்தி, பக்தருள் ஒளிரும் பரமேஸ்வர மூர்த்தி
காண கண் ஆயிரம் போதுமா
audio
கண்ணனைக் காண கண் ஆயிரம் போதுமா
அல்லிக் கேணி வாழ் ஆண்டவனை, ஐந்தாம் வேதம் உறைத்தோனை
இகழ்ந்தோனுக்கும் அருள் புரிந்தோனை, ஈனக் குருடனுக்கும் காட்சி தந்தோனை, அன்பனுக்காய் தேர் ஓட்டிய தேவனை, ஆயுதம் தொடாது அறம் காத்தவனை.........
ஸ்வாதி நாதனே நரசிம்மா! (Kaanada)
கானடா
ஸ்வாதி நாதனே நரசிம்மா!
ஸ்வாதீனமாய் வாழ அருள்பவனே,
தூணைத் தாயாய் கொண்டவனே! சிறு துரும்பிலும் நிறைந்த மாயவனே!
பாலனுக்காய் வந்த பரமாத்மா, பக்தருள் ஒளிரும் ஜீவாத்மா, அவர் சந்ததி காக்கும் ஸர்வேசா,
(ஸத்) குணநிதியே ஸ்ரீ லக்ஷ்மீசா!
கானக வாசனே, அஹோபிலா!
பானக ப்ரியனே, மா-லோலா! நாம ரூபனே, நர ஹரியே, நவ நர சிம்ஹ சுப ஹரியே
Ammai Appanae AAthi Guru-naathanae
Aabhogi
Ammai Appanae
AAthi Guru-naathanae
Iru-vinai kaLaiyum YEEswaranae
Umaiyoru Bhaaganae..
OOrthuva Thaandava Nataraajanae
Engum niraintha YAEkaa-naekanae,
AYnthozhil puri Aathi-Bhagavanae
Oppilaa OMkaara Jyothiyae
AWshatha aarogya Vaidhyanaathanae
அம்மை-அப்பனே
ஆதி குரு நாதனே
இருவினை களையும் ஈஸ்வரனே
உமை யொரு பாகனே
ஊர்த்வ தாண்டவ நடராஜனே
எங்கும் நிறைந்த ஏகானேகனே
ஐந்தொழில் புரி ஆதி பகவனே
ஒப்பிலா ஓம்கார ஜோதியே
ஔஷத ஆரோக்ய வைத்யநாதனே
சிவம் சுபம்
Ammai Appanae
AAthi Guru-naathanae
Iru-vinai kaLaiyum YEEswaranae
Umaiyoru Bhaaganae..
OOrthuva Thaandava Nataraajanae
Engum niraintha YAEkaa-naekanae,
AYnthozhil puri Aathi-Bhagavanae
Oppilaa OMkaara Jyothiyae
AWshatha aarogya Vaidhyanaathanae
அம்மை-அப்பனே
ஆதி குரு நாதனே
இருவினை களையும் ஈஸ்வரனே
உமை யொரு பாகனே
ஊர்த்வ தாண்டவ நடராஜனே
எங்கும் நிறைந்த ஏகானேகனே
ஐந்தொழில் புரி ஆதி பகவனே
ஒப்பிலா ஓம்கார ஜோதியே
ஔஷத ஆரோக்ய வைத்யநாதனே
சிவம் சுபம்
சக்தி கணபதியைத் தொழுது துவங்குவோம் (Aarabhi)
ஆரபி
(நாளைத் or தொழிலைத்) சக்தி கணபதியைத் தொழுது துவங்குவோம், ருத்ராஞ்சனேயன் அருளால் முடிப்போம்
வாரண முகத்தான் தடைகள் தகர்ப்பான், வானர தீரன் வெற்றிகள் குவிப்பான்
அன்னை தவம் காத்த ஆதி மூலன், அன்னை உயிர் காத்த ஆஞ்சனேயன், சிவ சக்தியே உலகம் என்ற கணபதி, சீதா ராமனை உள் வைத்த மாருதீ
கனி வைத்த கரத்தானும்,
கதை வைத்த கரத்தானும்,
இணைந்தருள் பொழியும் ஆத்யந்த ரூபமே இன்னல் களையுமே, இன்பம் பொழியுமே.
புவனகிரி கண்ட புனிதரே (Hamsaanandhi)
புவனகிரி கண்ட புனிதரே (Hamsaanandhi)
புவனகிரி கண்ட புனிதரே! புவனம் அளந்தோனுள் கலந்தவரே!
மத்வ சாம்ராஜ்ய மஹனியரே!
த்வைதாத்வைதரும் பணி ராயரே!
துங்கா தீரத்தின் மங்கா நிலவே,
ப்ருந்தா வனத்தொளிர் சூர்யரே,
ப்ரஹ்லாதனின் மறு அவதாரரே,
பிறவிப் பிணி நீக்கும் பேரருளாரே.
பசிப் பிணியைப் போக்கிடுவீரே
ஞான வேட்கையைத் தூண்டிடுவீரே
மஞ்சளம்மையின் பதம் பணிந்தும்மை
தஞ்சமடைந்தோரின் தயாநிதியே
சிவம் சுபம்
audio
புவனகிரி கண்ட புனிதரே! புவனம் அளந்தோனுள் கலந்தவரே!
மத்வ சாம்ராஜ்ய மஹனியரே!
த்வைதாத்வைதரும் பணி ராயரே!
துங்கா தீரத்தின் மங்கா நிலவே,
ப்ருந்தா வனத்தொளிர் சூர்யரே,
ப்ரஹ்லாதனின் மறு அவதாரரே,
பிறவிப் பிணி நீக்கும் பேரருளாரே.
பசிப் பிணியைப் போக்கிடுவீரே
ஞான வேட்கையைத் தூண்டிடுவீரே
மஞ்சளம்மையின் பதம் பணிந்தும்மை
தஞ்சமடைந்தோரின் தயாநிதியே
சிவம் சுபம்
audio
இறைவனும் உன் இசை கேட்டு நெகிழ்வான் (Revathi)
Revathi
இறைவனும் உன் இசை கேட்டு நெகிழ்வான், அந்த இறைவன் உன் மொழியே கேட்டு அருள்வான்
உன் இசையே அவனை துயிலெழுப்பும், உன் இசையே அவனை கண் மலரச் செய்யும்
செம்மொழி தமிழோ, வடமொழியோ, எம்மொழியானாலும், உன் குரலே அவன் செவி மடுப்பான், உன் முறையே எம் குறை தீர்க்கும், நாதோபாசனை நாயகியே, நான்மாடக்கூடல் கண்ட சுபமே, திருவே.....
அவ்வையும், மூவரும், நால்வரும், ஆழ்வாரும், ஆண்டாளும், அன்னமய்யாவோ, அருட்பாவோ, தாசரோ, மீராவோ, நானக்கோ, எப் பண்ணும் உன் குரலலில் மெருகேறும், எல்லா நலனையும் பெற்றுத் தரும்
சிவம் சுபம்
audio
அருள் பழுத்த செழுங்கனியே
அருள் பழுத்த செழுங்கனியே, அகம் பழுத்த சிவஞான அமுதே,
முத்திப் பொருள் பழுத்த அருட் பாவை எமக்களித்த தெய்வ மணப் பூவே
என்றும் மருள் பழுத்த அடியேங்கள் மன இருளை அகற்ற வரு மணியே,
மெய்ம்மைத் தெருள் பழுத்த வடலூர் வாழ் இராமலிங்க
நின்னருளைச் சிந்திப்பேனே.
audio
ஜோதி ஆரத்தி by வள்ளல் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள்.
ஜோதி ஜோதி ஜோதி சுயம் - ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள் - ஜோதி ஜோதி ஜோதி சிவம்
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி
மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி
ஏம ஜோதி வ்யோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி
ஏக ஜோதி ..ஏக ஜோதி..ஏக ஜோதி ...ஏக ஜோதி
ஆதி நீதி வேதனே ...ஆடல் நீடு பாதனே
வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே
audio
Chakkaraththilae amarnthu (Revati)
Revathi
Narasingaa endraal nara-rum Devar-aavaar
Narasingaa endraal nam vinaigal anaiththum odum
Narasingaa endraal namak-kaethu bayam
Narasingaa endraal namakellaam ini jeyamae......
ithu saththiyam thaanae....
Chakkaraththilae amarnthu sagalath-thaiyum ganikkum Thirumaalae,
Narasingaa, Naa-ra-Naa, naan-marai potrum.....Sudharsana......
ThiNNAmaai unai ninainthavar vaazhvinil
ThirumagaLum, Kalai MagaLum, Malai MagaLum aruL mazhai pozhivaarae
Annai Kosalai than maa-thavap payanae
oru siru viralaal giri yaenthiya Maayavanae
kodiya vinai kaLaiyum Komaanae.....
Kothai manam urai Sri Ranga Naathanae
பர வாசுதேவா பறந்தோடி வந்தென் பவம் களைய வா (Saaveri)
சாவேரி
பர வாசுதேவா பறந்தோடி வந்தென் பவம் களைய வா
மா தவம் செய்தோரே காணும் மாதவா! ஸ்ரீ தேவி பூ தேவி வருடும் மலர் பாதா!
காவேரி தீர வாசா, சாவேரி ராக நேசா, சமய புரத்தாளின் சகோதரா, தக்க சமயம் இது என்னை ஆளவா
கஜராஜ ராஜனை ரக்ஷித்த கருட வாஹனா, அசுர ஸம்ஹார அனந்த சயனா, சதா சிவ பக்த பதும நாபா, சரண கமலம் தந்து எனை ஆள வா வா
audio
அன்னையை மருவும் அய்யன் (Kamaas)
Kamaas
அன்னையை மருவும் அய்யன்
அருளே வடிவான மெய்யன்
தூணில் தோன்றும் தூயன், அக
இருளை போக்கும் ஆதித்யன்
சிறுவன் அழைக்க வந்தவன்,
பெரும் அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன், (பரசு) ராமனும் வணங்கிய பகவன், பக்த வத்சல
பரம தயாளன்
சேரையில் வாழும் நாரணன்,
சிம்ம முகப் புருஷோத்தமன், (நம்ம)
ராமர் கோயிலில் குடி இருப்பவன்,
செம்மை நலம் சேர்க்கும் மாயவன்.
சிவம் சுபம்
ந்ருசிம்ஹம் நிர்பயம்
audio
Siva Kumaaraa Sivai Kara Velaa (Sahaana)
Sahaanaa
Siva Kumaaraa Sivai Kara Velaa, Rathna Gireesaa Rakshitha Buvanesaa
Vaelooril OLir Vael Murugaesaa, un kaalooril naan nilaikkum varam thaa
Ichchai Kriyai maruvum Gyaanaesa, Gyaana bikshai iduvon aLiththa Guru-guhaesaa, Arupadai amarntha Aarumugaesa, Kaalam aritharuL pozhiyum Kaarthikaesaa.
audio
அன்புருவான சாயி
அன்புருவான சாயி
அன்புருவான சாயி
ஆருயிரே சாயி
இன்பமெலாம் நீயே, சாயி
ஈஸ்வரனே சாயி
உற்ற துணை, சாயி
ஊக்கம் தரும் சாயி
என்னுயிரே சாயி
ஏற்றம் அளிக்கும் சாயி
ஐந்தொழில் புரி சாயி
ஒப்பில்லா ஸ்ரீ சாயி
ஓம்காரப் பொருளே சாயி
ஔதார்ய வடிவே, சாயி
அடிமலர் பணிந்தேன் சாயி
அருள் மழை பொழி சாயி
audio
ஆஞ்சனேயன் அடிமலர் போற்றி (Dhanyasi)
ஆஞ்சனேயன் அடிமலர் போற்றி (Dhanyasi)
ஆஞ்சனேயன் அடிமலர் போற்றி, அடைவோம் நாமே அனைத்திலும் வெற்றி
அண்ணலை அரணாய் காத்தவன் அவனே! அஞ்சா நெஞ்சனவன் அஞ்ஜனையின் செல்வன்
அலைந்து திரிந்த ராம லக்ஷ்மணரும் அனுமனைக் கண்டே புத்துயிர் பெற்றாரே, அகன்ற கடல் தாண்டி அன்னை உயிர் காத்து ரகு குலம் காத்தவன் அனுமன் தானே, இளவலின் உயிர் மீட்டு இன்னும் ஓர் முறை ராமனைக் காத்தவன் அனுமன் தானே, வந்தான் ராமனென்று பரதனை ஆட்கொண்டு பார் புகழ ராமனின் அரியணை தாங்கிய......
audio
Siva smaranam Bava baya haranam (Reethi Gowlai)
Reethi Gowlai
Siva smaranam Bava baya haranam
Siva paatha sevanam, suga saathaanam, (iga para suga saathanam)
Siva darsanam paapa vimochanam
Siva baktha sahitham, jenmaathra sugirtham
Sivaabishekam Varuna jepam
Sivaalankaaraam hruth-nethra sugam
Sivaa paatha basmam roha nivaaranam
Siva kathaamrutham suba prasaatham
Sivam Subam
audio
ஆதி அந்தமில்லா ஈசனுக்கு ஆதிரையில் அபிஷேகம் (Ranjani)
Ranjani
ஆதி அந்தமில்லா ஈசனுக்கு ஆதிரையில் அபிஷேகம்
பிறப்பிறப்பில்லா பெம்மானுக்கு, நம் பிறவிப் பிணி தீர ஆராதனம்
சேந்தனார் களியுண்ட செம்மலுக்கு மார்கழி ஆதிரையில் அபிஷேகம்,
அவர் பல்லாண்டு ஏற்ற பரமனின் அற்புத ஆருத்ரா தரிசனம்
திருவெம்பாவைத் தலைவனுக்குத் திருவாதிரைத் திரு மஞ்சனம், த்ரேதாவின் சௌபாக்யம் காத்திட்ட திரு ஆருத்ரனின் கரிசனம்
சிவம் சுபம்
audio
நந்தவனத்துறை நடராஜன் (Suddha Saveri)
சுத்த சாவேரி
நந்தவனத்துறை நடராஜன், பவ
பந்த விமோசன சிவ ராஜன்
ஆருத்ரா அபிஷேகம் கொண்டானே
அன்பர் உள்ளம் கொள்ளை கொண்டானே
திருப்பள்ளி எழுச்சி கேட்டு எழுவான்
திருவெம்பாவையில் லயித்திருப்பான்
மணிவசாகரின் திரு வாசகத்த்திற்கே
உள்ளம் நெகிழ்வான், உறுதியாய் அருள்வான்
சிவகாம சுந்தரி நாயகன் அவனே
அவமாயை நீக்கும் ஆதி பராபரன்
ஐந்து சபைகளில் ஆடிடும் தேவன்
நைந்து பணிந்தால் விரைந்து அருள்வான்
சிவம் சுபம்
audio
Thyaagath Thiru Urvae (Thillang)
Thilang
Thyaagath Thiru Urvae! Devanin Maru Uruvae! Namskaaram
Annai Mary'in arum-thavamae, Akilamae potrum arputhamae, Namaskaaram
Siluvai-yil nilai konda paer aruLae, innal seithorukkum inmugam kaattiya peru manamae, yaesuvorukkum aruLum Yaesu Naatharae,
Christhuvae umakku Namaskaaram
audio
Enga veettu Meenaakshi
Enga veettu Meenaakshi
Engum nirai Meenaakshi
Ezhil konjum Meenaakshi
AruL pongum Meenaakshi
Mahaa RaaNi Meenaakshi Maragatha-maeni Meenaakshi, Malli soodum Meenaakshi, en Thalli ava Meenaakshi
NeeL VizhiyaaL Meenaakshi,
Meen vizhiyaaL Meenaakshi,
Kaar mugilaaL Meenaakshi,
Kadamba vana Meenaakshi
Sri Chakra Meenaakshi,
Siva-Sakthi Meenaakshi
Ulagengum Aval Aatchi
uththamargaL manasaakshi.
audio
Subscribe to:
Posts (Atom)