Tuesday, March 22, 2016

அன்னை காமாக்ஷி அருட் குரு வடிவே, (AmirthavarshiNi)


AmirthavarshiNi

அன்னை காமாக்ஷி அருட் குரு வடிவே,
அடிமலர் பணிந்தேன், அனுக்ரஹம் செய்வாயே

நாம கோடீஸ்வரி, ஏகாம்பரேஸ்வரி, காம கோடிஸ்வரி, சந்த்ர சேகரீ

பரமாச்சார்ய பர ப்ரஹ்ம ரூபிணி,
தவக்கோலம் கொண்டெம் அவம் நீக்கும் தேவி, கையில் கிளி ஏந்தும் கதம்பவன மயிலே, உன் பதமலர் எந்தன் சிரம் வைத் தாள்வாயே

சுநாத வினோதினி, சுக ஸ்வரூபிணீ,
சிம்ஹ வாஹினி, ச்ருத ஜன பாலினி,
அநாத ரக்ஷகி, அமிர்த வர்ஷிணி,
ஷண்மத ரூபிணி, சங்கரி, பாவனி

சிவம் சுபம்

No comments:

Post a Comment