Tuesday, March 22, 2016

அரி அரன் சுதனே! உனைக் காணவந்தேனே,


அரி அரன் சுதனே!  உனைக் காணவந்தேனே,
ஆறு வாரங்கள் நோன்பெடுத்தேனே
இரு முடி தாங்கி ஓடி வந்தேனே,
ஈடில்லா உன் அருளைப் பருக வந்தேனே

உறக்கமின்றி உன் புகழைப் பாடி வந்தேனே,
ஊக்கமுடன் உன் பதமலர் பணிந்து வந்தேனே,
என் குலதெய்வம் உனைத் தொழுது  வந்தேனே,
ஏற்றம் அளிப்பாய் என நம்பி வந்தேனே

ஐந்து மலைகள் ஏறி வந்தேனே,
ஒப்பிலா பம்பையில் குளித்து வந்தேனே,
ஓம்கார ரூபன் உனைக் கண்டு கொண்டேனே,
ஔதார்ய மூர்த்தி உன் அருளை உண்டேனே

சரணம் ஐய்யப்பா ஸ்வாமீ சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா ஸ்வாமீ சரணம்
ஐய்யப்பா
ஸ்வாமீ சரணம் ஐயப்பா, ஸ்வாமீ சரணம் ஐய்யப்பா.

சிவம் சுபம்

audio

No comments:

Post a Comment