Tuesday, March 22, 2016

எழுந்தருள்வாய் ஞாயிறே (Bhoopalam)


 பூபாளம்

எழுந்தருள்வாய் ஞாயிறே, இருள் களைந்தருள்வாய் கதிரவனே

அருணனை சாரதியாய் கொண்டவனே
கருணனை ஈன்ற புண்ணிய்னே

பீஷ்ம முக்தி உத்த ராயணனே, சகல
தோஷ நிவாரண சிவ சூரியனே,
ஸந்த்யா வந்தன நாயகனே
ஷண்மதம் பரவும் சௌரனே

நவகோள்களின் நடு நாயகனே
அகத்தியன் போற்றிய ஆதித்யனே
அண்ணலுக் கருளிய ஆதவனே
இன்னல் களைவதில் முதல்வனே

சிவம் சுபம்

No comments:

Post a Comment