Tuesday, March 22, 2016

சக்தி கணபதியைத் தொழுது துவங்குவோம் (Aarabhi)



ஆரபி

(நாளைத் or தொழிலைத்) சக்தி கணபதியைத் தொழுது துவங்குவோம், ருத்ராஞ்சனேயன் அருளால் முடிப்போம்

வாரண முகத்தான் தடைகள் தகர்ப்பான், வானர தீரன் வெற்றிகள்  குவிப்பான்

அன்னை தவம் காத்த ஆதி மூலன்,  அன்னை உயிர் காத்த ஆஞ்சனேயன், சிவ சக்தியே உலகம் என்ற கணபதி, சீதா ராமனை உள் வைத்த மாருதீ

கனி வைத்த கரத்தானும்,
கதை வைத்த கரத்தானும்,
இணைந்தருள் பொழியும் ஆத்யந்த ரூபமே இன்னல் களையுமே, இன்பம் பொழியுமே.


No comments:

Post a Comment