Tuesday, March 22, 2016

அன்னையை மருவும் அய்யன் (Kamaas)



 Kamaas

அன்னையை மருவும் அய்யன்
அருளே வடிவான மெய்யன்

தூணில் தோன்றும் தூயன், அக
இருளை போக்கும் ஆதித்யன்

சிறுவன் அழைக்க வந்தவன்,
பெரும் அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன், (பரசு) ராமனும் வணங்கிய பகவன், பக்த வத்சல
பரம தயாளன்

சேரையில் வாழும் நாரணன்,
சிம்ம முகப் புருஷோத்தமன், (நம்ம)
ராமர் கோயிலில் குடி இருப்பவன்,
செம்மை நலம் சேர்க்கும் மாயவன்.

சிவம் சுபம்
ந்ருசிம்ஹம் நிர்பயம்

audio

No comments:

Post a Comment