Tuesday, March 22, 2016

வர வேண்டும் வர வேண்டும் குரு நாதரே (Siva Ranjani)



Siva Ranjani

வர வேண்டும் வர வேண்டும் குரு நாதரே, தர வேண்டும் தர வேண்டும் (உம்) பத மலரே

க்ஷேமம் அருளும் சேஷாத்ரி நாதரே! குறைவிலா வாழ்வருளும் குழந்தை யானந்தரே!

காவேரி அன்னை தொழும் காமாக்ஷி புத்ரரே!  ராஜ மாதங்கி மீனாக்ஷி சிசுவே! ஊஞ்சலூர் வாழும் காஞ்சன கரத்தாரே! அரச போகம் அளிக்கும் அரசரடி தூயரே!

ஷண்முக ரமணரை அறிவித்த சிவையே,
மாண்டவரை மீட்ட மாண்புடை மேருவே,
வேற்றுமை களைந்தெம்மை இணைக்கும் சேதுவே, வேண்டுவோர் வேண்டுமுன் அருளும் ஈஸ்வரரே

No comments:

Post a Comment