புவனகிரி கண்ட புனிதரே (Hamsaanandhi)
புவனகிரி கண்ட புனிதரே! புவனம் அளந்தோனுள் கலந்தவரே!
மத்வ சாம்ராஜ்ய மஹனியரே!
த்வைதாத்வைதரும் பணி ராயரே!
துங்கா தீரத்தின் மங்கா நிலவே,
ப்ருந்தா வனத்தொளிர் சூர்யரே,
ப்ரஹ்லாதனின் மறு அவதாரரே,
பிறவிப் பிணி நீக்கும் பேரருளாரே.
பசிப் பிணியைப் போக்கிடுவீரே
ஞான வேட்கையைத் தூண்டிடுவீரே
மஞ்சளம்மையின் பதம் பணிந்தும்மை
தஞ்சமடைந்தோரின் தயாநிதியே
சிவம் சுபம்
audio
No comments:
Post a Comment