
Kaapi
அன்னை மடி தவந்த மழலை யானந்தமே, அவள் அருள் அமுதுண்ட குழந்தை யானந்தமே, அங்கயற் கண்ணி..........
சேஷாத்ரி நாதர் போற்றும் பரந்த உள்ளமே, (உம்) சேவடி எம் சிரம் வைத்தாள் குழந்தையானந்தமே
காலபயம் போக்கும் பைரவானந்தமே, காம மயல் நீக்கும் சத்-சித்-ஆனந்தமே, வாதாதி ரோஹம் மாய்க்கும் வைத்யானந்தமே, ஞான வைராக்ய மளிக்கும் குருபரானந்தமே
பக்தி சிறக்க அன்னையை மேருவாய் வடித்தாய், பக்தருக் கருள அதன் அருகில் அமர்ந்தாய், ஏசுவோர்க்கும் அருளும் நேசமிகு தேவனே, என்றும் எம் மனம் வருடும் குழந்தையானந்தமே
audio
No comments:
Post a Comment