Sunday, August 19, 2018

சங்கடஹர கணேசன் (Sri Ganesha)



சங்கடஹர கணேசன்

அன்னை அளித்த கணேசன்
ஆனை முக கணேசன்
இச்சை க்ரியை ஞான கணேசன்
ஈச குமாரன் கணேசன்

உலகை வலம் வந்த கணேசன்
ஊழ்வினை மாற்றும் கணேசன்.
எருக்கமாலை கணேசன்
ஏக தந்தன் கணேசன்

ஐங்கரக் கடவுள் கணேசன்
ஒப்புயர்வில்லா கணேசன்
ஓங்கார வடிவ கணேசன்
ஔவையின் அகவல் கணேசன்.

அரைமுழத்துணி கணேசன்
அருகம் புல்லணி கணேசன்
சதுர்த்தியின் நாயகன் கணேசன்
சங்கட ஹர கணேசன்.

 சிவம் சுபம்

No comments:

Post a Comment