Sunday, August 19, 2018

உன்னையே நம்பி வாழும் ஏழை நானல்லவோ



உன்னையே நம்பி வாழும் ஏழை நானல்லவோ, வேறு துணை மில்லா பேதை என்றறியாயோ, தாயே

உலகேழும் ஆளும் அன்னைக்கு நான் சொல்லவோ, அது உன் புகழுக்கு சற்றே இழுக்கல்லவோ

இருவரை மட்டுமே ஈன்றனையோ, ஈறேழுலகும் உனதென்பதை    மறந்தனையோ, தன்னையே தருபவள் அல்லவோ, தர்மசமவர்த்தினி உன் பெயரல்லவோ

அண்ணனை காக்க வந்த துர்க்கையே, ஆலவாயனைக் காத்த அங்கயற்கண்ணியே,  ஆளுடைப் பிள்ளைக்கு பால் ஊட்டினையே, உன் கால் பிடித்த என்னை காப்பதுன் கடமையே. 

சிவம் சுபம்

No comments:

Post a Comment