Sunday, August 19, 2018

Pradosha Bhajan (Nandi Song)


ப்ரதோஷ தர்சனம் (Bajan) 

ஆலம் ஆண்டு அகிலம் காத்தவன்
அரி அயன் வேண்ட எழுந்த காலம்.

அன்னை மடியில் அயர்ந்த தேவன்
அகிலம் உய்ய எழுந்த காலம்.

சுருட்டப் பள்ளியில்
சயனித்த இறைவன்
விழைந்தெழுந்து அருள்
பொழி காலம்

நந்தி தேவரின் கொம்பின் இடையில்
அந்தி மயங்கும் ப்ரதோஷ வேளையில்
ஆடிடும் காலம்,
ஆனந்தக் கோலம். 

கண்டவர்க்கில்லை பிறவி இனியே,
வலம் வந்தவர்க்கினி
என்றும் சுபமே, சுகமே

சிவாலயம் சென்றிடுவோம்.
சிவ சக்தியைக் கண்டு தொழுதிடுவோம்.
தேவாரம் சூட்டிடுவோம்.
திருவாசகத்து  ஓழுகிடுவோம்.

ப்ரதோஷ வலம் வந்திடுவோம்.
ப்ரணதார்த்தி ஹரனுள் லயித்திடுவோம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
சிவாய நம ஓம் நமசிவாய.

சிவம் சுபம்

No comments:

Post a Comment