Sunday, August 19, 2018

Nalla Buddhi Enakku Illai Aiyaa



நல்ல புத்தி எனக்கு இல்லை அய்யா... அது எப்ப வரும் நீ சொல்லைய்யா

கந்தய்யா முருகய்யா வேலய்யா... என் கதறல் உன் காதில் விழவில்லைய்யா ?

ஊறுகாப்போல உன்னை தொட்டுகிட்டு
ஊரைச் சுத்தி ஏமாத்தி திரிஞ்சு கிட்டு, நல்லவங்க மனத்தை நோகவிட்டு, பாவப் பள்ளத்தில் விழுந்து நொந்து கிட்டு (நான்) வாழுவது எதுக்கு சொல்லைய்யா

முடிஞ்சா என்னை திருத்தி விடு..... முடியாது போனா தீர்த்து விடு... பிறவி இன்னொன்னு நீ கொடுத்தா, (என்னை)
நல்லவரோடு சேர்ந்து வாழ விடு, உனை நன்றியோடு துதிக்க விதித்து விடு.

சிவம் சுபம்.

No comments:

Post a Comment