Sunday, August 19, 2018

ஜெய ஜெய சங்கர ஹர சந்த்ர சேகர (Mahaperiyavaa Song)

OM

ஜெய ஜெய சங்கர ஹர சந்த்ர சேகர
ஹர ஹர சங்கர ஜெய சந்த்ர சேகர

காஞ்சி வாழ் ஈசா
காம கோடீசா
மறை வடிவேசா
குறை களை ஈசா

இருவர் தேடும் பாதம் பதித்து,
காதம் நடந்து
வேதம் காத்து,
தருமம் உரைத்த
தெய்வக் குரலே !
குரல் பொழி அமுதே !
ஆறாம் வேதமே!

மறை தாங்கும் சிரமலர் போற்றி,
அன்னை உறையும் மனமலர் போற்றி,
அருளைப் பொழியும் கரமலர் போற்றி,
பிறவிப் பிணி தீர்க்கும்
பதமலர் போற்றி   

ஜெய ஜெய சங்கர ஹர சந்த்ர சேகர
ஹர ஹர சங்கர ஜெய சந்த்ர சேகர

சிவம் சுபம்

No comments:

Post a Comment