உ (சாரங்கா)
ஆலவாய் மதுரையே எந்தன் ஊர்,
அதிலுறை மீனாளே என் அன்னை.
அவள் திருநாமமே என் ஸ்வாஸம்.
அவள் திருப்பாதமே என் ஸ்வர்க்கம்.
அவள் ஒரு பாகமே என் அய்யன்,
அவளிரு பிள்ளையே என் உறவு,
அவள் கரக்கிளியே என் நட்பு,
அவள் பிள்ளைத் தமிழே என் வேதம்.
அவள் ஆலயமே கௌரீ லோகம்,
அதனுள் அடங்கும் கைலாயம், அன்னை அவளே நாராயணி, எனவே வைகுண்டமும் அதன் ஒரு பாகம்.
ஆலமும் மதுரையில் அமுதாகும், அங்கு வதிந்தோரை வாழ வைக்கும். மரணம் என்பதே அங்கில்லை,
மங்கலத்திற்கங்கு குறைவில்லை..... என்றும் குறைவில்லை.
சிவம் சுபம்.

No comments:
Post a Comment